• Mar 19 2026

சிம்பு ஒழுங்காக இருந்திருந்தால் விஜயை காலி பண்ணிருப்பாரு..! பிரவீன் காந்தி சர்ச்சை பேச்சு

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகராக வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் பிரவீன் காந்தி. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை. இதனால், இயக்குனர் பிரியதர்ஷன் இடத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.

1997 ஆம் ஆண்டு “ரட்சகன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகரான நாகார்ஜுனா மற்றும் உலக அழகியான சுஷ்மிதா சென் ஆகியோரை நடிக்க வைத்து, ஏ.ஆர். ரகுமான் இசையில் இந்த படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக்கினார். இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது.

இதன் வெற்றியை தொடர்ந்து “ஜோடி” படத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் பிரசாந்த் நடிப்பில் “ஸ்டார்” படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் துணை நடிகராகவும் நடித்தார். ஆனால் அதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கிய அவர், பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக கலந்து கொண்டார். எனினும், முதல் வாரத்திலேயே வெளியேறினார்.


இந்த நிலையில், தற்போது விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி அவர் கூறுகையில், சிம்பு மட்டும்  ஒழுங்காக இருந்திருந்தால், இந்த நேரம் விஜயை காலி பண்ணிருப்பாரு என பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். 

மேலும் விஜய்க்கு ரஜினி தான் ரோல் மாடல். நாளைக்கே ரஜினி ஒரு சிக்னல் கொடுத்தார் என்றால் உங்களுக்கே எதிரா மக்கள் நிப்பாங்க. நீங்க நிற்கின்ற இடம் எல்லாம் ரஜினி ரசிகர்கள் தான் நிற்பாங்க. நீங்களும் தோத்துப் போயிருவீங்க என பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement