• Jun 28 2026

பாக்யராஜின் இறுதிச் சடங்கு எப்போது.? கண்ணீரோடு வழியனுப்பத் தயாரான தமிழ் சினிமா

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் திரைக்கதை சக்ரவர்த்தி எனப் போற்றப்பட்ட நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் இறுதிச் சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற வெற்றிப் படைப்புகளை வழங்கிய பாக்யராஜ், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இல்லத்தில் நேற்று முதல் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பின்னர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.


இறுதி ஊர்வலத்தில் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை மற்றும் குடும்பக் கதைகளால் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரை பதித்த பாக்யராஜின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது இறுதிப் பயணத்தில் ரசிகர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement