• Jun 28 2026

பிக் பாஸ் வீட்டில் நியாயம் பேசிய திவ்யா கணேஷ்... இப்போது இந்த காட்சிகளா? ரசிகர்கள் ஷாக்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்தது. இந்த சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் திவ்யா கணேஷ். இதற்கு முன்பும் அவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது இந்த சீரியல்தான்.

இதைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே யாருக்கும் பயப்படாமல் தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

குறிப்பாக அந்த சீசனில் பங்கேற்ற பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோருக்கு எதிராக நேரடியாகக் களம் இறங்கிய முக்கிய போட்டியாளராக திவ்யா கணேஷ் பார்க்கப்பட்டார்.

நேருக்கு நேர் நியாயத்திற்காக பேசிய விதமும், அனைவரிடமும் அன்பாக பழகிய தனித்துவமான அணுகுமுறையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பார்வதியும் கமிருதனும் வெளியேறுவதற்கு திவ்யா கணேஷின் பங்களிப்பு இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு ஆதரவாக வாக்குகள் குவியத் தொடங்கின. இறுதியில் அவர் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.


பிக் பாஸ் பட்டத்தை வென்ற பிறகு, அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது 'ஆஹா' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் திவ்யா கணேஷ் நடித்துள்ளார்.

எனினும், இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான உடைகளிலும், நெருக்கமான காட்சிகளிலும் அவர் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், துண்டு மட்டும் கட்டிக்கொண்டு தொலைபேசியில் பேசும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தக் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் நியாயத்திற்காக பேசிய திவ்யா கணேஷ் இதுவா? சினிமா வாய்ப்புகளுக்காக இப்படி மாறிவிட்டாரா? என்று தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement