• Jul 28 2026

இசை விழாவுக்கு தயாரான ‘அர்ஜுனன் பேர் பத்து’.. எப்போது தெரியுமா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் யோகி பாபுவின் புதிய திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ தற்போது இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்து வெளியாகத் தயாராகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், யோகி பாபுவுடன் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான ‘சாமி தந்த வரமே’ பாடலும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

குறிப்பாக, இது யோகி பாபுவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் 300-வது திரைப்படம் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இதற்கிடையில், ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.

ஜூலை 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், யோகி பாபுவின் கதாநாயகன் பயணத்தில் மற்றொரு முக்கிய வெற்றிப்படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

Advertisement

Advertisement