• Aug 18 2026

மாப்பிள்ளை கோலத்தில் விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மனோஜ்.. கனகா செய்த காரியம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக சாமியார் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என அண்ணாமலையிடம் விஜயா பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், தன்னுடன் வருமாறு மனோஜையும் அழைக்கிறார்.

ஆனால், உழைத்தால்தான் பணம் வரும் என்று மனோஜ் அறிவுப்பூர்வமாகப் பேச, வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

மேலும், முத்துவை முதலாளியாக மாற்றுகிறார் மீனா. அதன்படி, எட்டு கார்களுக்கு ஓனரான முத்துவை உடை முதல் நடை வரை மாற்றுகிறார். ஆனாலும், அதைப் பார்த்த விஜயா, "எப்படி மாறினாலும் கடைசியில் காரைத்தானே ஓட்டப் போகிறாய்" என்று ஏளனமாகப் பேசுகிறார்.


இதைத்தொடர்ந்து, மனோஜ் மணமகன் கோலத்தில் வருகிறார். இதைப் பார்த்த வீட்டார், "உன்னுடைய நண்பருக்குத்தானே திருமணம்? நீ ஏன் மணமகன் போல வந்திருக்கிறாய்?" என்று கேட்கின்றனர். ஆனால், மனோஜால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இறுதியாக, கனகா திருமணத்துக்கு தயாராகாமல் வீட்டையே ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அவருடைய அம்மா, உனக்கு மனோஜுடன் திருமணம் நடக்கப் போகிறது என்று சமாதானப்படுத்துகிறார். அந்த நேரத்தில் மனோஜ் அங்கு வந்து இறங்குகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement