• Feb 03 2023

என்ன ஆச்சு இவருக்கு- நடிகை அமலா பாலின் புது ஹேர் ஸ்டைல்- மோசமாக கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

Listen News!
stella / 2 months ago
image

Advertisement

Listen News!

மலையாள நடிகையான அமலாபால் தமிழில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஸ்கல்யாண் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மைனா என்னும் படத்தில் நடித்தார்.

இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு அதற்காக தேசிய விருதினையும் பெற்றார்.இப்படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்தார். முன்னணி நடிகையானதும் இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.


திருமணமாகி ஒருசில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இதனால் வாய்ப்புகள் இழந்தும் மார்க்கெட்டை பரிகொடுத்தும் வந்த அமலா பால் கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி என்று வாழ்ந்து வருகிறார்.

இடையில் கிடைக்கும் படங்களில் நடித்து வந்த அமலா பால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள அவரது புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement