• Apr 23 2025

இது என்ன கன்றாவி போஸ் கொடுக்கிறீங்க, வீட்டில இருக்கிய பிரச்சினைக்கு இது தேவையா?- ராதிகாவும் கோபியும் செய்த அலப்பறை

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்  பட்டாளமே காணப்படுகின்றது. கணவனைப் பிரிந்து வாழும் பெண் தன்னுடைய வாழ்க்கையில் எப்படியான பிரச்சினைகளை எதிர் கொள்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சீரியலின் கதைப்படி பாக்கியா தன்னுடைய பிஸ்னஸை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபட்டு வருகின்றார். இது ஒரு புறம் இருக்க செழியனுக்கு ஜெனி வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதால் ஜெனியையும் செழியனையும் எப்படி சேர்த்து வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றார்.


அத்தோடு எழிலின் மனைவி அமிர்தாவின் முதல் கணவன் மீண்டும் வந்து அமிர்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால்,பாக்கியா எழில் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்றுவது என்ற பிரச்சினையிலும் இருக்கின்றார்.


இது ஒருபுறம் இருக்க ஷுட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் செய்வது போட்டோ எடுப்பது என்பவற்றையும் வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது கோபியும் ராதிகாவும் இணைந்து இருவரும் ஒருவரை ஒருவர் முறைப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி  வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement