• Mar 14 2025

விஜய் படத்தின் சூப்பர் அரசியல் அப்டேட்..! என்ன தெரியுமா..?

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் H. வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிக்கும் "ஜனநாயகன்" படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெட்ஜ் மற்றும் பொப்பி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


படப்பிடிப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் மற்றும் படக்குழுவின் கடின உழைப்பின் பிறகு "ஜனநாயகன்" படத்தை அடுத்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளனர். 


மேலும் இந்த படத்தில் விஜய் மற்றும் VTV கணேஷ் இணைந்து அரசியல் கட்சியின் boot commity சம்மந்தமான ஒரு முக்கிய காட்சியில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காட்சி படத்திற்கு மேலும் சிறப்பையும் ஒரு புதிய பரிமாணத்தையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை விட குறித்த காட்சியினை விஜய் சூட்டிங் தளத்தில் மிகவும் சிம்பிளாக எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மற்றும் இந்த படம் குறித்து வெளியாகும் புதிய அப்டேட்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி "ஜனநாயகன்" படத்திற்கான வெற்றிக்கு வழி வகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement