• Jan 18 2025

பிக் பாஸ் எதை நோக்கி போகிறது... வெளிய போகவேண்டிய எலியெல்லாம் வீட்டுக்குள்ளே சுத்துது... விக்ரமோடு தப்பித்த வில்லங்கம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நேற்றைய எபிசோடில் எட்டு போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி இருந்தனர். ஆனால் இந்த ஜோவிகா மட்டும் தொடர்ந்து தப்பித்து வருவது பலருக்கு எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டை பொருத்தவரையில் ஒன்றும் தெரியாத மக்கு என்று தான் இவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது இவருக்கு பாடவும் வரல, ஆடவும் வரல, மரியாதையும் வரல.  மத்தவங்கள மதிக்கவும் வரல ஆனால் சூனியக்கார கும்பலோடு சேர்ந்து வில்லத்தனம் மட்டும் செய்ய தெரியும். அதிலும் பிரதிப் வெளியேறியதற்கு பிறகு வந்த வாரத்தில் இவர் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.


இதுவே ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தது. அதை தொடர்ந்து கமலின் சில அறிவுரைகளால் இவர் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இருப்பினும் இந்த வாரம் நாமினேஷனில் இரண்டு ஓட்டுகளை வாங்கிய இவர் தப்பித்ததை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


ஏனென்றால் அதே இரண்டு ஓட்டுகளை வாங்கிய ரவீனா நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார். அப்படி பார்த்தால் இவர் பிக்பாஸால் காப்பாற்றப்படுகிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆக மொத்தம் மிக்சர் விக்ரம் தான் தப்பிச்சாருன்னு பார்த்தா இந்த மிக்சர் குடோனும் தப்பித்து விட்டது.


இந்த ஷோ எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தான் பிக்பாஸ் ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு விஷயங்கள் எல்லாம் நடந்து வருகிறது. அதிலும் மக்களால் வெளியே துரத்தப்பட்ட மூன்று பேர் மீண்டும் வருவது சிறு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement