விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது சிறப்பாகவும், அதே சமயம் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த சீசன், ஆரம்பத்திலிருந்தே சண்டை, சர்ச்சை, குழப்பங்கள் என பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர். அவர்களின் வெளியேறலுக்குப் பிறகு, வீட்டுக்குள் மீதமுள்ள போட்டியாளர்களுக்குள் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த சீசன் ஆரம்பித்தது முதல், “சண்டை இல்லா நாள் இல்லை!” என்று தான் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஒவ்வொரு எபிசொட்களும் புதிய திருப்பங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, “வைல்ட் கார்டு என்ட்ரி யாரு?” என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில், சின்னத்திரை உலகில் பிரபலமான ஜோடியான பிரஜன் மற்றும் சான்ட்ரா ஆகியோர் வீட்டுக்குள் வருவார்கள் என வதந்திகள் பரவின. இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தம்பதியர் என்பதால், அவர்களின் பங்கேற்பை எதிர்பார்த்து பலர் உற்சாகம் காட்டினர்.
ஆனால், சமீபத்திய தகவலின் படி, அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரே வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் பிரவேசிக்க உள்ளார்.
அதுவேறு யாருமில்லை சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் தான் வைல்ட் கார்டு என்ட்ரியாக வரப்போகிறார்.

திவ்யா கணேஷ், “பாக்கியலட்சுமி” என்ற பிரபலமான விஜய் டிவி சீரியலின் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த சீரியலில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பும், உணர்ச்சி பூர்வமான கேரக்டரும் ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பெற்றது.
அத்தகைய நடிகை திவ்யா கணேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்ற செய்தி வெளியாகியதுமே, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆர்வத்துடன் கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.
Listen News!