• Oct 29 2025

அழகிகளை வாட்டி வதக்கிய மாரி செல்வராஜ்.! அனுபமாவின் இதயத்திலிருந்து 'பைசன்' அனுபவம்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் பைசன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மெகா ஹிட் ஆகி இருக்கின்றது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை, பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்கள்  தொடர்ச்சியாக ஹிட் கொடுத்தன. இதைத்தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பைசன் படத்தை இயக்கியிருக்கின்றார் மாரி.  இது அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. 

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி 'பைசன்' படம் வெளியானது. இந்த படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். உலக அளவில் இப்படம் 55 கோடிகள் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துருவ்விற்கும் மார்க்கெட் உயரும் என நம்பப்படுகிறது.


இந்த நிலையில் 'பைசன்' படத்தில் துருவ்விற்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், 'பைசன்' குறித்து பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அன்று எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், 'பைசன் படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைகிறது. சில படங்கள் சாதாரணமானவை அல்ல. எனக்குப் பாசம், உணர்வு, பருவம் போன்றவற்றை உணரச் செய்து விட்டது. 'பைசன்' எனக்கு அப்படிப்பட்ட படம். 

இது எனக்கு வாழ்நாள் முழுவதும் பல நினைவுகளை மனதில் நிலைத்திருக்கச் செய்யும். மாரி செல்வராஜ் என்னை தேர்ந்தெடுத்ததற்கு, கதையில் சிறப்பு இடம், வேடம் கொடுத்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையை நான் எப்போதும் நன்றியுடன் காப்பாற்றுவேன்.

மேலும் நமது சூப்பர் ஸ்டார் துருவ் விக்ரமுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய பயணம் வளர்வதற்கு வாழ்த்துக்கள். இது வெறும் அதிர்ஷ்டம் அல்ல, உங்களுடைய முயற்சியின் பலன். என்றும், 'பைசன்' படக்குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் அனுபமா.

Advertisement

Advertisement