விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன் எட்டாவது சீசனில் இருந்து விஜய் சேதுபதி களமிறங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு எதிர்ப்புகள், பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அத்தனையும் தவிடு பொடியாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகின்றார் விஜய் சேதுபதி. ஆனால் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து சண்டை மற்றும் வன்முறை நிறைந்த போட்டியாளர்களை கொண்டிருப்பதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இவ்வாறான சூழலில் விஜய் சேதுபதி வன்முறையில் ஈடுபடும் போட்டியாளர்கள் மற்றும் இரட்டை வார்த்தை பேசும் போட்டியாளர்களை கண்டிக்க மறுக்கின்றார், இவர் போட்டியாளர்களின் முகத்துக்கு நேராக பேசுகின்றார், ஆனால் எந்த போட்டியாளர்கள் பேச வந்தாலும் அவர்களை பேச விடாமல் உட்காருங்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி அடக்கி விடுகின்றார்.

ஏனைய மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் உள்ள தொகுப்பாளர்களை ஒப்பிடும்போது விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சிக்கு மிகவும் பலவீனமானவராக காணப்படுகின்றார். சில சந்தர்ப்பங்களில் விஜய் சேதுபதி தடுமாறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை, டிஆர்பியும் ஏனைய மொழிகளை விட குறைவு.
ஹவுஸ் மேட்ஸ்களிடம் விஜய் சேதுபதி கண்டிப்பும் காட்டுவதில்லை. அருவருப்பாக பேசுபவர்களை விஜய் சேதுபதி கண்டிப்பதில்லை என அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் இந்த சீசனில் இருந்து அவர் வெளியேறலாம் என்றும் மீண்டும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!