சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற “Bad Girl” திரைப்படம் தற்போது OTT தளத்திற்குப் பயணமாகியுள்ளது. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி JioHotstar தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படம், செப்டெம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் ஓடிய குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக பிரச்சனைகள், பெண்களின் மனநிலை, மற்றும் சமூகத்தின் நெறிமுறைகளை சவால் விடும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

“Bad Girl” திரைப்படம் ஒரு பெண் சமூகத்தை அடிப்படையாக கொண்ட சூழலை விவரிக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கை, ஆசைகள், சுதந்திரம் மற்றும் சமூக நியாயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமீபகால தமிழ் சினிமாவில் அரிதாக உருவான வலுவான பெண்மையை மையப்படுத்திய கதையாக பார்க்கப்படுகிறது.
Listen News!