சமீபத்தில் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “BRO CODE” என்ற பெயர் பயன்படுத்துவதைக் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது தான்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு, பிரபல வணிகச் சின்ன உரிமை பிரச்சனையை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் திரையுலகத்திலும் வணிக உலகத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவி மோகன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம், ஆரம்பத்திலேயே “BRO CODE” என்ற பெயருடன் அறிவிக்கப்பட்டது. இந்த பெயர் பலருக்கும் பரிச்சயம் மற்றும் வரவேற்பு பெற்றதாகும். திரைப்பட தயாரிப்பாளர் தரப்பில், இந்த தலைப்பை குழப்பமின்றி புதிய, ப்ரொமோஷனல் மற்றும் மார்க்கெட்டிங் நோக்குடன் பயன்படுத்த விரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த திரைபபடத்திற்கு எதிராக, இந்தியாவில் பிரபலமான மதுபான தயாரிப்பு நிறுவனம் “Indo-Spirit Beverages” தரப்பினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். “BRO CODE” என்ற பெயரில் இந்நிறுவனம் மதுபானம் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்நிறுவனம் “BRO CODE என்பது எங்களுடைய வணிகச் சின்னம். மக்கள் இதை எங்களுடைய மதுபான தயாரிப்போடு இணைத்து நினைக்கின்றனர். அதே பெயரை திரைப்பட தலைப்பாக பயன்படுத்துவது, நுகர்வோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் நமது வர்த்தக உரிமைகளை மீறுகிறது. " எனவும் தெரிவித்துள்ளனர்.
 
                              
                             
                            _69007a7f40271.jpg) 
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _6900a047ef94e.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69004638ad865.webp) 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!