• Oct 29 2025

விஜயா வீட்டில் திடீர் அசம்பாவிதம்?மொத்த குடும்பமும் பயத்தில்.. முத்து செய்த காரியம்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜின் ஷோரூம்க்கு பாம்பாட்டி ஒருவர் அயன் பாக்ஸ் வாங்குவதற்காக வருகின்றார். அவர் வரும்போது  பையில் பாம்பு பெட்டி ஒன்றை வைத்திருக்கின்றார்.  இதனால் மனோஜ் அதனை கவனிக்காமல் அவருடைய பொருட்களை வெளியில் வைத்து விட்டு உள்ளே செல்லுமாறு  சொல்லுகின்றார்.

அந்த நேரம் ரோகிணி அங்கு வரும்போது, அவர் காலில் பட்டு, பையில் இருந்த பாம்பு வெளியே வருகிறது. ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை. பிறகு ரோகிணி மனோஜை கடைக்கு செல்லவேண்டும் என வெளியே அழைத்துச் செல்லுகிறார்.

வீட்டுக்கு வந்த ரோகிணியின் பையில் இருந்து பாம்பு வெளியே வருகிறது. அங்கு விஜயாவுக்கு வைத்த பாலை அந்த பாம்பு குடித்து விடுகிறது. இதனால் 'பாலை யார் குடித்தது?' என்று விஜயா புலம்புகிறார்.


இன்னொரு புறம், பாம்பாட்டி தனது பாம்பை காணவில்லை என்று மனோஜின் ஷோரூமில் மகுடி ஊதித் தேடுகிறார். இதனால் அங்கிருந்தவர்கள் எல்லோரும் கடைக்கு வெளியே நின்று, மனோஜ்க்கு நடந்தவற்றை சொல்லுகிறார்கள்.


பின், விஜயா இரவு சமையலறைக்குச் செல்லும்போது பாம்பை கண்டு அலறுகிறார். அதன் பின் மொத்த குடும்பமும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, விஜயா மீனாவின் கையை இறுக்கப் பிடித்தவாறு இருக்கிறார். இறுதியில், முத்து தைரியமாக சென்று அந்த பாம்பை பிடித்துவிடுகிறார்.

அதன்பின், ' எல்லா பிரச்சனையும் உன்னால்தான்' என்று விஜயா, வழக்கம் போல ரோகிணியை திட்டுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement