பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, அரசி கடையோட கணக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்ப மயில் நீ எதுக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற அந்தக் கணக்கை நானே பார்க்கிறேன் என்கிறார். அதுக்கு அரசி வேணாம் என்றவுடனே மயில் அப்பா எவ்வளவு பணத்தை எடுத்தாரோ தெரியா என்று யோசிக்கிறார். பின் பாண்டியன் பிறந்தநாளில் அன்று நடந்த எல்லாத்தையும் நினைத்துப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு என்று சொல்லுறார்.

அதனை அடுத்து பாண்டியன் கதிரையும் பாராட்டுறார். மேலும் அம்மாச்சி முகத்தில தெரிஞ்ச சந்தோசம் இனி வாழ்க்கையில எங்க தேடினாலும் கிடைக்காது என்கிறார் பாண்டியன். மறுபக்கம், அரசி கணக்குப் பார்க்கும் போது காசு குறையுது என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறார். பின் பாண்டியன் கிட்டயும் போய் கணக்கு கொஞ்சம் இடிக்குது என்கிறார் அரசி.
அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் சரவணன் மயிலை கோபமாக பார்க்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் பழனியைப் பார்த்து அந்தக் காசை நீ தான் எடுத்தியா என்று கேட்கிறார். அதுக்கு பழனி நான் எடுக்கல என்கிறார்.இன்னொரு பக்கம் செந்தில் மீனா சமைச்சுக் கொண்டு வருவா என்று wait பண்ணிக் கொண்டிருக்க மீனா கிச்சனுக்குள்ள நித்திரை கொள்ளுறார்.
பின் மீனா எனக்கு சமைக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு கடையில வாங்கிட்டு வாறீங்களா என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் கடை சாப்பாடு சாப்பிட்டால் உடம்புக்கு சரி வராது என்கிறார். அதனை அடுத்து ராஜியும் கதிரை பாராட்டிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!