• Oct 29 2025

Real BB Game பிளேயர் இவங்க தான்.. மீனவ பொண்ணுக்கு அதிகரிக்கும் ஆதரவு

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அதற்கு பின்பு  தானாகவே முன்வந்து நந்தினி வெளியேற, முதல் வார எவிக்சனில் பிரவீன் காந்தி,   இரண்டாவதாக அப்சரா  மற்றும் கடந்த வாரம் ஆதிரையும் வெளியேறி இருந்தனர். 

பிக் பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.  இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து  பார்வையாளர்கள் மத்தியில்  சலிப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் இந்த சீசனில்  சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளது தான். 

அதிலும் குறிப்பாக திவாகர்,  அகோரி கலையரசர், பலூன் அக்கா எனப்படும் அரோரா ஆகியவர்கள்  திறமை இல்லாதவர்கள்,  அவர்களை பிக் பாஸ் எதற்காக செலக்ட் பண்ணியது  என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வந்தது.  ஆனால் தற்போது  திவாகருக்கு மக்கள் ஆதரவு வழங்க  ஆரம்பித்துள்ளனர். 


இந்த நிலையில்,  பிக் பாஸ் சீசன் 9ல் கலந்து கொண்ட மீனவப் பொண்ணு  சுபிக்ஷாவுக்கு  ஆதரவு பெருகி வருகின்றது.  அதாவது இவர் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில் கேமை நன்றாக புரிந்து கொண்டு  விளையாடுவதாகவும்,  நேர்மை நியாயத்தின் படி நடப்பதாகவும் பார்வையாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

இதனால் பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே ஃபர்ஸ்ட் டைம்  21 st century born contendtent சுபி தான் இப்படி மெச்சூரா இருக்காங்கன்னு நம்மளாலே சொல்ல முடிஞ்சிருக்கு.. 

சுபிக்ஷா கேம் சென்ஸ், எமோஷனல் ஹோல்டு, செல்ப்   ரியலைசேஷன் எல்லாத்தையும்  பண்ணிக்கிட்டு,  தன்னுடைய தப்பையும் புரிந்துகொண்டு கேம் பிளே  பண்ணுறாங்க என்று சுபிக்ஷாவுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement