• Oct 29 2025

ஆமா இது ஆர்மி கேம்ப் தான்.. VJ பார்வதிக்கு ஒரே போடாய் போட்ட பிரவீன்.!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை அதிகளவான சோஷியல் மீடியா பிரபலங்கள் பங்கேற்றதால் இந்த சீசன் சர்ச்சைக்கு உரியதாக மாறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா எனப்படும் அரோரா, அகோரியாக இருந்த கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். 

இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம்  இந்த சீசனில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ்க்கு பிரவீன் கேப்டன் ஆகியுள்ளார். இதன் போது அவர் போட்டியாளர்களுக்கு விதித்த ரூல்ஸ் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் வழக்கம் போல விஜே பார்வதி பிரவீன் மீது எகிறியுள்ளார்.

அதில் அவர் பிரவீனிடம், இந்த வாரத்தை நீங்க ஆர்மி கேம்ப் போல கொண்டு செல்ல போறீங்களா என்று கேட்க, இந்த வாரத்தை எப்படி கொண்டு போகணுமோ அப்படி தான் கொண்டு போவேன் என பிரவீன் சொல்லுகிறார்.

ஆனால் பார்வதி மீண்டும், அப்படி என்றால் ஆர்மி கேம்ப் போல தான் கொண்டு போக போறீங்களா என்று கேட்க, ஆமாம் என்று பிரவீன் சொல்ல, அதை சொல்லிட்டு போங்களேன் என பார்வதி கத்துகிறார்.

ஒரு கட்டத்தில் கோவப்பட்ட பிரவீன், ஆமா இது ஆர்மி கேம்ப் தான். விஜே பார்வதி வாய மூடிட்டு உட்காரு என்று கத்த, சும்மாவே கேரக்டரா நடிப்ப, இப்போ ஆர்மி கேம்ப் என்றா சொல்லவா வேண்டும் என பார்வதி கடுப்பாகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. 

Advertisement

Advertisement