சீசன் 1 மற்றும் 2 மூலம் ரசிகர்களின் இதயத்தில் தன்னைத் தனித்துவமாக நிறுவிய பிரபலமான web series ‘The Family Man’ தனது மூன்றாவது சீசனை வெளியிடவுள்ளது. மனோஜ் பாஜ்பாய் மற்றும் ப்ரியாமணி தலைமையில் உருவாகும் இந்த புதிய சீசன், நவம்பர் 21ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தொடர், திரையுலகிலும் OTT பிரியர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னர் வெளியான சீசன்களில் காட்டப்பட்ட அதிரடி திரைக்காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தன. மீண்டும் மனோஜ் பாஜ்பாய், கம்பேக் கொடுப்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

முக்கியமாக, மூன்றாவது சீசனில் கதையின் திருப்பங்களை புதுப்பித்து வழங்குவதற்காக, சுமன்குமார் மற்றும் துஷார் இணைந்துள்ளனர். இது முன்னைய இரு சீசன்களின் இயக்குநர்கள் ராஜ் & டிகே உடன் இணைந்து, தொடரின் சிறந்த தனித்துவத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
Listen News!