பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்பு முதல் வாரத்திலேயே நந்தினி வெளியேற, தொடர்ந்து பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறினர்.
கடந்த வாரம் நடைபெற்ற எவிக்சன் சிலருக்கு சாதகமாக இருந்தாலும், பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆதிரைக்கு முதல் வாரத்தில் அமோக ஆதரவு கிடைத்தது. அவர் ரசிகர்களிடம் தனக்கான இடத்தை தக்க வைத்தார். அவர் ஆரம்பத்தில் பேசிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் மனதில் எழுந்த கேள்விகளின் பிரதிபலிப்பாகவே காணப்பட்டது.
இவர் நிச்சயமாக பிக் பாஸ் பைனல் மேடையில் ஏறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அவரும் எஃப்ஜேவும் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அவருடைய செயற்பாடுகளும் பேச்சுக்களும் சலிப்பை ஏற்படுத்தி, இறுதியில் எலிமினேஷன் வரை கொண்டு சென்றது.

இறுதியில் விஜய் சேதுபதியுடன் பேசிய ஆதிரை, நான் வீட்டிற்குள் இருக்க தகுதி உடையவள். ஆனால் தகுதி இல்லாமல் இன்னும் பலர் உள்ளே இருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்போருக்கு சரியான புரிதல் இல்லை என்று பேசி மேலும் வெறுப்பை சம்பாதித்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 ல் கலந்து கொண்டு எலிமினேட் ஆகி வெளியேறிய ஆதிரை பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு நாளைக்கு ஆதிரைக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் அவர் 21 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருந்ததால் சுமார் 3 லட்சத்து 15 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!