பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கம்ருதீன் பற்றி பார்வதி கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேற, 16 பேர் பிக் பாஸ் வீட்டில் தற்போது காணப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிரஜின் – சாண்ட்ரா ஜோடி செல்லயிருக்கின்றனர். அவர்கள் சரி உள்ளே சென்று சிறந்த கன்டென்ட் கொடுப்பார்களா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய நாளில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் சமீப காலமாகவே மிக நெருக்கமாக கம்ருதீன், விஜே பார்வதியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பில் திவாகரிடம் மனம் திறந்து பேசி உள்ளார் பார்வதி.

அதன்படி அவர் கூறுகையில், நேற்று ஒரு டாஸ்க்ல கம்ருதீன் வேலைய பார்த்து விட்டான். ரெண்டு பொண்ணுங்க கான்செப்ட் மாதிரி ட்ரை பண்றாங்க.. அது எனக்கு 'அன்வான்டட் டச்சஸ்'னு பீல் ஆகுது . எனக்கு அது தெரியுது..
நான் டேட் பண்ணா கான்செப்ட்டோட தான் பண்ணுவேன்.. உன்னுடைய ஊறுகாய்க்கு எல்லாம் என்ன பயன்படுத்திக் கூடாது. சில விஷயங்களை பவுண்டரி மீறி தான் ஆகிவிட்டீஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறான்.
நீ எனக்கு தோழர், நான் உனக்கு ஒரு தோழி இந்த மீட்டர்லே இருந்துக்கோ என்று பாரு திவாகரிடம் சொல்ல, ரொம்ப ரொம்ப கவனமா இருந்துக்கோ என்று திவாகர் பார்வதிக்கு சொல்லுகிறார்.
Listen News!