• Jan 19 2025

ஜான்வி கபூருக்கு திடீரென என்னாச்சு? மும்பை ஹாஸ்பிடலில் அவசர அனுமதி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக காணப்படும் ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார்.

இவர் முதலில் அறிமுகமானது பாலிவுட் திரையுலகம் என்றாலும் தற்போது தேவாரா மற்றும் ராம்சரணுடன் நடிக்கும் படத்தின் மூலம் தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதனால் கூடிய விரைவில் தமிழிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் ஆனந்த் அம்பானி வீட்டில் இடம் பெற்ற திருமணத்தில் பங்கேற்ற ஜான்வி கபூர், விதவிதமான உடைகளில் வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அவர் ராதிகா மெர்ச்சண்ட்டின் தோழி என்பதால் திருமண நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லாமல் பேச்சுலர் பார்ட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூருக்கு கடந்த இரண்டு நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து ஜான்வியின் தந்தை கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாகவே அவர் மிகவும் சோர்வாகவும் உடல் நலம் குறைவாகவும் காணப்பட்டார். அவருடைய உடல்நிலை சரியாகி விடும் என்று வீட்டிலேயே மருத்துவ பரிந்துரைப்படி மருந்துக்கள் கொடுத்து ஓய்வெடுத்தார். ஆனாலும் அவருக்கு இன்னும் சிகிச்சை வேண்டும் என்று தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூரின் இந்த நிலைமைக்கு ஃபுட் பாய்சன் மற்றும் அலர்ஜி தான் காரணம் எனக் கூறப்படுகிறது. ரசிகர்களும் அவர் சீக்கிரமே நலமாக வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement