• Jan 21 2026

இன்று காலை வெளியாகிறது "ஜமா" படத்தின் பெஸ்ட் சிங்கிள்.

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் பாரி இளவழகனின்  இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும்  "ஜமா" திரைப்படமானது தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது.சேந்தன்,அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை என நடிகர் தேர்வு படத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

Jama (2024) - Movie | Reviews, Cast ...

படத்தின் டீசர் வெளியாகி தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த குறுகிய டீசரிலேயே படத்தின் கதை மற்றும் கதைத்தேர்வுக்கான காரணங்களை எல்லாம் மிகவும் சுலபமாக புரியும் வகையில் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் பாரி இளவழகன்.

Image

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தியொன்று படத்திற்கான அடுத்த கட்ட எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.அதாவது "ஜமா" படத்திற்காக இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் படத்தின் முதல் பாடலான 'நீ இருக்கும்' பாடல்  இன்று காலை 11.30 மணியளவில் வெளியாகும் என உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement