• Feb 22 2025

இலங்கைக்கு வாக்கிங் ஸ்டிக் உடன் வந்த DD... DDக்கு என்னத்தான் ஆச்சி... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்வை முன்னிட்டு இலங்கைக்கு தென்னிந்திய கலைஞர்கள் வருகைதந்திருந்தனர். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வரும் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது. 


யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


இதேவேளை இன்று இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான  நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ்  நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி,ரச்சித்தா  உள்ளிட்ட பல கலைஞர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


இவர்களுக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வரும் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது. அவருக்கு கால் முட்டியில் ஆபரேஷன் செய்திருப்பதால் நீண்ட நேரம் நிற்க முடியாது என அவரே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement