• May 08 2024

விரைவில் ஹீரோயின் ஆகும் வனிதா மகள் ஜோவிகா! ஹீரோ யாருன்னு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ஐ பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்தது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

பிக் பாஸ் சீசன் 7 இல் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், தற்போது மாடலிங், போட்டோ ஷூட் செய்வதில் பிசியாக இருந்து வருகிறார் ஜோவிகா.


இந்நிலையில், விரைவில் ஜோவிகா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

18 வயது நிரம்பப் உள்ள தனது மகளுக்கு, ஹீரோயினியாக நடிக்க பல படங்களில் கதைகளை வனிதா கேட்டு வருகிறாராம்.


அதன்படி, விரைவில் நல்ல கதையம்சம் உள்ள படம் வாய்க்கும் போது அதில் தன் மகள் கட்டாயம் ஹீரோயினியாக நடிப்பார், அப்போது  ஹீரோ யார் என்று தான் தெரிவிப்பதாக அண்மை பேட்டி ஒன்றில் வனிதா தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஜோவிகா நடித்து விட்டால் மூன்று தலைமுறையாக நடிப்புத் துறையில் இருக்கக்கூடிய குடும்பம் என்ற நிலை விரைவில் இவர்களுக்கு கிடைக்கும்.


Advertisement

Advertisement

Advertisement