• Feb 27 2026

ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டாவின் அம்மா கொடுத்த காஸ்ட்லீ கிஃப்ட்..? கசிந்த தகவல்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்வாக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இவர்களது திருமணத்தை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் படை திரண்டு உதய்பூருக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், உதய்பூரில் நடைபெற்ற சங்கீத் விழாவில் இடம்பெற்ற ஒரு பாரம்பரிய சடங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமணத்திற்கு முன்பான சடங்குகளின் ஒரு பகுதியாக, விஜய் தேவரகொண்டாவின் தாயார், ராஷ்மிகா மந்தனாவுக்கு தேவரகொண்டா குடும்பத்தின் தலைமுறைகளாக கடந்து வரும் பாரம்பரிய வளையல்களை அணிவித்து, அன்புடன் வரவேற்றுள்ளார்.

இந்த வளையல்கள், ராஷ்மிகாவை தேவரகொண்டா குடும்பத்தின் ஒரு உறுப்பினராக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இந்த தருணம் இரு குடும்பத்தாருக்கும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்ததாக கூறப்படுகிறது. 


ராஷ்மிகாவுக்கு அணியப்பட்ட பாரம்பரிய வளையல்கள், குடும்ப பாசம், முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் உறவுகளுக்கிடையிலான உறுதியான பிணைப்பு ஆகியவற்றின்  முக்கிய நினைவுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

இவர்களுடைய சங்கீத் விழாவிற்கு முன்பாக, ‘விரோஷ் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தனியார் முறையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த திருமணத்திற்கு அம்பானி குடும்பம் முதல் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் வரை பலர் கலந்து கொள்ளும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement