• May 05 2026

தியேட்டர் இல்ல.. நேரடியா Netflixல் தான்.! பிரியங்கா மோகனின் "மேட் இன் கொரியா" ரிலீஸ் தேதி

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மேட் இன் கொரியா” தற்போது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. 

ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், இந்தியா – கொரியா கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள “மேட் இன் கொரியா” திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டு பின்னணியில் நகரும் கதை கொண்டதாக கூறப்படுகிறது. தனது காதலனுடன் தென் கொரியாவிற்கு செல்லும் இளம் பெண், தனிமையை உணர்வது தான் கதையின் மையம்.

முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட “மேட் இன் கொரியா” திரைப்படம், தற்போது நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது. உலகப் புகழ்பெற்ற OTT தளமான Netflix-இல் வரும் மார்ச் 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement