• May 08 2026

காதல் கணவருடன் ரொமான்ஸ்… ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர் ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு கலக்கினார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் நடித்த பல காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களால் பகிரப்பட்டு வருகின்றன. இதன் மூலமே ரோஷினிக்கு மிகப்பெரிய பிரபலமும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன. சசிகுமார், சூரி  இணைந்து நடித்த கருடன் படத்தில் நடித்திருந்தார். மேலும் மெட்ராஸ் மேட்னி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். 


பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் 2025 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற தலைவன் தலைவி படத்தில், விஜய் சேதுபதியின் தங்கையாக ராகவர்த்தினி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரோஷினிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ்-ஐ திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னுடைய காதல் கணவருடன் ரோஷினி ஹரிப்ரியன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement