• Feb 27 2026

கையும் களவுமாக சிக்கிய அஞ்சலி-சரவணன்.. ஷாக்கில் மீனா.! இனி என்ன நடக்கும்.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு எதுவுமே போட்டு கொடுக்காமல் இருக்கிறார். அதைப் பார்த்த பாண்டியன் கோபப்படுறார். பின் கோமதி இவர் மட்டும் வழிக்கு வரட்டும் புடிச்சதை ஆக்கிப்போட்டு ஊட்டியே விடுறேன் என்கிறார். அதனை அடுத்து மயில் மீனாவைப் பார்க்கிறதுக்காக கோவிலில வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். 

பின் மீனா வந்தவுடனே மயில் இனிமே எனக்கு 17,000 சம்பளம் என்று சந்தோசமாகச் சொல்லுறார். அதனை அடுத்து ரெண்டு பேரும் சாமியை கும்பிட்டு கோவிலிலயே கொஞ்ச நேரம் இருக்கிறார்கள். பின் மீனா வேலை செய்யுற இடத்தில எல்லாம் நல்ல மாதிரி போகுதா என்று கேட்கிறார். அதுக்கு, மயில் அங்க எல்லாம் நல்ல மாதிரி தான் இருக்கு என்கிறார்.


பின் மயில் பாண்டியன் வீட்டில எவ்வளவு சந்தோசமா இருந்தன் என்று சொல்லி பீல் பண்ணிக் கதைக்கிறார். அதைக் கேட்ட மீனா அதைப் பற்றி எல்லாம் ஜோசிக்காதீங்க என்கிறார். மறுபக்கம் அஞ்சலி சரவணனுக்கு போன் எடுத்து கோவிலுக்கு கிளம்பிட்டியா என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் 15 நிமிசத்தில அங்க இருப்பன் என்கிறார்.

அதனை அடுத்து மயில் மீனாவைப் பார்த்து எவ்வளவு கடன் இருக்குத் தெரியுமா என்று சொல்லி கவலைப்படுறார். அந்த நேரம் பார்த்து அஞ்சலி கோவிலில வந்து நிற்கிறதைப் பார்த்த மீனா ஷாக் ஆகுறார். மேலும், இந்தப் பொண்ணு சரவணன் மாமாவைப் பார்க்க வந்திருப்பாளா என்று ஜோசிக்கிறார் மீனா. அதே மாதிரி சரவணனும் கோவிலுக்கு வந்து அஞ்சலியோட கதைக்கிறதை மீனா பார்க்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement