• May 25 2026

'அந்த மெமரீஸ் தான் காரணம்.' ஆர்யாவுடன் நடிக்க விரும்பாத நடிகை.. சொன்ன காரணம்.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற நடிகை அபர்ணதி,  விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த இறுகப்பற்று படத்தில் விதார்த் மனைவியாக நடித்து பிரபலமானார். அதற்கு பின்பு அவர் நடித்த தேன் படமும் பல பாராட்டுகளை பெற்றது.

இதைத் தொடர்ந்து தனியார் சேனலில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுக்கான மணப்பெண் தேர்வில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணதியும் ஒருவர்.

ஆர்யா நமக்கே என்கிற நம்பிக்கையில் வந்த 16 பேரில் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்தது அபர்ணதி தான். ஏதோ ஆர்யா தன் கழுத்தில் தான் தாலி கட்டுவார் என்பது போன்று அவரிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டார். அந்த காரணத்திற்காகவே பலரும் அபர்ணதியை சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.


ஆனால், 16 பெண்களில் ஒருவர் அல்ல, நடிகை சயீஷாவை ஆர்யா கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 5 வயது அரியானா என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் ஆர்யா உடன் சேர்ந்து நடிக்க விரும்பவில்லை என்று நடிகை அபர்ணதி கூறியது பல விமர்சங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அதன்படி அவர் கூறியதாவது, நான் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் 100 நாட்களுக்கும் மேலாக ஆர்யாவுடன் பயணித்தேன். அதில் நல்ல மெமரீஸ் கிடைத்தது. அதனால் போலியான கதைக்காக காதலி அல்லது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதே காரணத்தால் நான் ஆர்யா உடன் சேர்ந்து படம் பண்ண விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement