• Feb 27 2026

தேவாவுக்கும் பிரபு தேவாவுக்கும் தான் போட்டியே..! இணையத்தை கவர்ந்த இன்ஸ்டா போஸ்ட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

இந்தியா திரை உலகின் முன்னணி நடிகராகவும் நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவராக பிரபு தேவா திகழ்ந்து வருகின்றார். இவருடைய நடனத்திற்கும் நடன அசைவுகளுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக் பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜாதி ராஜா என்ற பாடலுக்கு குரூப் டான்சராக ஆடி தன்னுடைய பயணத்தை தொடர்ந்தவர் பிரபு தேவா. அதற்கு பின்பு ஜென்டில்மேன்  திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர். அதற்கு பின்பு அவருடைய க்ரூப் டான்சர் ஆக இருந்தவரை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுடைய குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி பிரபு தேவா அந்தப் பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.


எனினும் ஒரு கட்டத்தில் அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதற்கு பின்பு நயன்தாராவை பிரபு தேவா திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இரண்டாவது ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பிரபு தேவா தற்போது திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பிரபலமான தேவா, சிறுவர்களுடன் நகைச்சுவையாக ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். நடிகர் பிரபு தேவாவின் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிறுவர்களின் முயற்சிக்கு தன்னுடைய பங்களிப்பை வழங்கிய பிரபு தேவாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Advertisement