தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்த நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் கீழ் முதல் படமாக ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக தனது அடுத்த கட்டத்தை தொடங்கவிருக்கிறார். சினிமாவில் பல இளம் இயக்குநர்கள், நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கி புதிய கதைகள் மற்றும் புதிய திறமைகளை ஊக்குவித்து வரும் நிலையில், பிரதீப்பின் இந்த முடிவு கவனம் பெறுகிறது.
இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக, இளம் நடிகை மமிதா பைஜூவை மையமாகக் கொண்டு ஒரு படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்று வரும் மமிதா பைஜூ, தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் தானே இயக்குவாரா? அல்லது வேறு இயக்குநருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Listen News!