• Mar 20 2026

நடிகர் பிரேம்ஜிக்கு இதுதான் பெஸ்ட் பர்த்டே.. ரொம்ப பொறுப்பா மாறிட்டாரே..!!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி, வெளிநாட்டில் இசை தொடர்பான படிப்பை முடித்துவிட்டு யுவன் ஷங்கர் ராஜாவிடம் பணியாற்றினார். 

பின்னர் சிம்புவின் ஊக்கத்தால் நடிகராக அறிமுகமான அவர், பல படங்களில் நடித்ததுடன், தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் தொடர்ந்து இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இதைத் தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, என்னமோ நடக்குது, கசடதபற, ஆர்.கே. நகர், பார்ட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கோவா படத்திற்கு பின்னணி இசையும் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் இந்து என்பவரை காதலித்து திருத்தணியில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் பிரேம்ஜி. மேலும் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி  தனது பிறந்த நாளைக் நேற்று கொண்டாடியுள்ளார். அப்பாவான பின்பு அவருக்கு இதுதான் முதல் பிறந்த நாள் என ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement