• Mar 20 2026

விஜய் அண்ணா.. என்னை என்ன வேணா செய்யுங்க! மிரட்டல்களுக்குப் பணியமாட்டேன்.! ஜூலி

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் மீது விமர்சனம் வெளியிட்டதையடுத்து, தன்னை மற்றும் தனக்கு நெருங்கியவர்களை மிரட்டுவதாக கூறி, பிக்பாஸ் பிரபலமான ஜூலி கடும் பதிலடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடிகர் விஜய் நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் அவர் அரசியல் மற்றும் சமூக நிலவரங்கள் குறித்து பேசியதுடன், ஒரு குட்டிக்கதையையும் எடுத்துக்கூறியிருந்தார். அந்தக் கதையின் மூலம் அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்குரியதாக மாறின.

இந்த நிலையில், பிக்பாஸ் மூலம் அறிமுகமான ஜூலி, விஜய் பேச்சை விமர்சித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், விஜய் கூறிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், அவர் சொன்ன குட்டிக்கதை பற்றியும் விமர்சனங்களை முன்வைத்தார்.


ஜூலியின் இந்த வீடியோ வெளியாகியதும், விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் ஜூலியை குறிவைத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

இதற்கிடையில், தன்னை மிரட்டுவதாக கூறி ஜூலி மேலும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன். எனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னை மிரட்டினால் பரவாயில்லை. ஆனால் என்னைச் சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்,” எனவும் அவர் கூறியுள்ளார். தன்னை நேரடியாக எதிர்கொள்ளலாம் எனவும், “விஜய் அண்ணா, உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன், இல்லை என்றால் எனது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களை விட்டுவிடுங்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.

ஜூலி மேலும், “நீங்கள் பனையூரை விட்டு வெளியே வரமாட்டீர்களா? நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்,” என்றும் சவால்விடும் வகையிலும் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

அத்துடன், சிலர் கருத்து சுதந்திரத்தை ஆதரித்து ஜூலிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மற்றொருபக்கம், விஜய் ரசிகர்கள் ஜூலியின் விமர்சனம் தேவையற்றது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement