• Mar 20 2026

ராதிகா அம்மா பிச்சிட்டாங்கன்னு சொல்லுவீங்க.. தேசிய விருது கன்போர்ம்.. ஐஸ்வர்யா ராஜேஷ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான தாய்க்கிழவி  படம், அதன் சிறப்பு காட்சி மூலம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ‘பவுனு தாய்’ எனும் வேடத்தில் ராதிகா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு காட்சியில் பலரும் கலந்து கொண்டு படத்தைப் பார்த்து பாராட்டினர். நடிகைகள் ஷாலினி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், நளினி மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இந்த நிலையில், படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “இந்த படத்தில் ராதிகா அம்மா பிரித்து மேஞ்சிட்டாங்க. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்த படம் கண்டிப்பாக நண்பர்கள், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு கிடைத்தது. ராதிகா அம்மா பிச்சிட்டாங்க என்று நீங்கள் சொல்லுவீர்கள்..” என்றார்.

மேலும், நடிகை நளினி கூறுகையில், “இது ஒரு படம் இல்லை, எல்லாரும் பார்க்க வேண்டிய பாடம். எல்லா பெண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்த படம் ராதிகாவுக்கு தேசிய விருது வாங்கித் தரும்,..” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement