• Feb 27 2026

இசையும் எழுத்தும் இணைந்தது..!! தனது காதலியை கைபிடித்தார் ராப் பாடகர் வேடன்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்த வேடன், சமூக கருத்துகளை தைரியமாக முன்வைக்கும் ‘Voice of the Voiceless’ பாடல் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். இவருடைய பாடல்கள் சாதி அடக்குமுறைக்குக்கு எதிராக காணப்படும். 

கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து நரிவேட்டை, பைசன் உள்ளிட்ட படங்களில் பாடி, தனித்துவமான குரலாலும், வரிகளாலும் இசை உலகில் தனக்கென இடம் பிடித்தார். 

சமீபத்தில் தனது காதலி நவமி லதாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய வேடன், அவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். 


இந்த நிலையில், பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருச்சூரில் எளிய முறையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாடகர் வேடனின் திருமண நிகழ்வில், இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதன்படி நேற்றைய தினம் அவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான நவமி லதாவுடன் இணைந்த வேடனுக்கு, இசை ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் சமூக வலைத்தள ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement