• May 08 2026

'என்னை இடைஞ்சலாக நினைச்சான்; ஆனா அவனால என் வாழ்க்கையே போச்சு' சுந்தர்ராஜன் வேதனை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர்ராஜன், நடிகர்-இயக்குநர் கே.பாக்யராஜ் குறித்து பேசிய கருத்துகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

ஆரம்ப காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், காலப்போக்கில் அவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சுந்தர்ராஜன் தனது சினிமா வாழ்க்கையில் பாக்யராஜ் செய்த ஒரு விஷயத்தை துரோகமாகக் குறிப்பிட்டு, அதை மன்னிக்கவே முடியாது என்று மனவேதனையுடன் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசும்போது, 'அவன் போற பாதையில் என்ன ஒரு இடைஞ்சலா நினைச்சிருக்கலாம். ஆனா உண்மை என்னன்னா, என் வாழ்க்கையே இல்லாம போனதுக்கு அவன்தான் காரணம். நானும் பாக்யராஜும் ஒண்ணாதான் இருந்தோம். 


ஆனால் ஒரு நாள், பாரதிராஜா ஒருத்தர் வந்திருக்காரு, அவருக்கு அசிஸ்டன்ட் வேணும்னு கேட்டாங்க. அப்ப ‘யார் போறீங்கன்னு கேட்டப்போ, நான் தான் என் நண்பனை அனுப்புங்க, அவன் நல்லா ஆங்கிலம் பேசுவான் என்று பாக்யராஜை அனுப்பி வைத்தேன்' என தெரிவித்துள்ளார்.

மேலும், 'அவன் போக மாட்டேன்னு சொன்னவன், நைட்டோட நைட்டா எழுந்து போயிட்டான். அதுலதான் எங்களுக்குள்ள மனஸ்தாபம் ஆரம்பிச்சது. எந்த ரோட்டுல நானும் அவனும் பட்டினியா போனோமோ, அதே ரோட்டுல அவன் பென்ஸ் கார்ல போனான், ஆனால் நான் மட்டும் பசியோட நடுரோட்டுல நின்னேன். 

கடைசியாக அவனிடமிருந்து வந்த கடிதத்தில் ‘நீ ஊருக்கு போ, நான் டைரக்டர் ஆனதும் உன்னை கூப்பிடுறேன்னு எழுதி, நடுப்பக்கத்துல நன்றின்னு போட்டிருந்தான். அதுதான் எங்களுக்குள்ள நடந்த கடைசி விஷயம்' என சுந்தர்ராஜன் உருக்கமாக கூறியுள்ளார்.

இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement