• May 08 2026

யூடியூப் ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தைப் பிடித்த நானியின் பாடல்.. எது தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் “தி பாரடைஸ்”. பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், இயல்பான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நானி அதிரடி கேங்ஸ்டராக நடித்துள்ளார். திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருந்தது.


2026 பிப்ரவரி 24ஆம் தேதி, தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிய நானிக்கு, படக்குழு தரப்பில் இருந்து சிறப்பு பரிசாக “ஆயா ஷேர்” (Ayaa Sher) என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டது. பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இந்த பாடல், ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. 

“ஆயா ஷேர்” பாடல் முழுக்க முழுக்க மாஸ் எனர்ஜியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளில் நானி கேங்ஸ்டர் கெட்டப்பில் மிரட்டலாக தோன்றியுள்ளார். 

இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளவர் இசை உலகின் சென்சேஷன் என அழைக்கப்படும் அனிருத் ரவிச்சந்தர். 

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அனிருத் இசையில் உருவான “ஆயா ஷேர்” பாடல் யூடியூப் மியூசிக் ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement