• May 08 2026

ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் அரண்மனையை பார்த்தீர்களா.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய் தேவரகொண்டா  மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் இன்று திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா  வாழப்போகும் விஜயின் ஹைதராபாத் இல்லத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் குறித்த அரண்மனை ரூ.15 கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் – பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த பல அடுக்கு மாளிகை, நவீன கட்டிடக்கலை வடிவமைப்பால் கட்டப்பட்டுள்ளது..


2019ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த வீடு, விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. பெரிய பிரெஞ்சு ஜன்னல்கள், இயற்கை ஒளி நிரம்பிய ஹால், மொட்டை மாடி பால்கனி, மரத்தரை அமைப்பு, தங்க நிற விளக்குகள் கொண்ட ஸ்டைலிஷ் படுக்கையறை உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.

விஜய் தனது பெற்றோர், தம்பி ஆனந்த் தேவரகொண்டா மற்றும் செல்ல நாயுடன் இங்கு வசித்து வருகிறார்.  மேலும் விஜய்க்கு திரைப்படங்கள், முதலீடுகள், பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் ‘Rowdy’ ஃபேஷன் பிராண்டு மூலம் வருமானம் பெறும் அவர், ரூ.50–70 கோடி நிகர மதிப்பு கொண்டவர் என கூறப்படுகிறது

Advertisement

Advertisement