• May 08 2026

வில்லன் முகத்துக்குப் பின்னால் இருக்கும் மனிதாபிமானம்.. ஆனந்த் ராஜ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான ஒரு நேர்காணலில் நடிகர் ஆனந்த் ராஜ் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறார் என்பது குறித்து அவர் பகிர்ந்த கருத்துக்கள் பலரையும் நெகிழச் செய்துள்ளது.


அதன்போது," சிலருக்கு தண்ணி அடிக்காமல் இருந்தால் கை நடுங்கும், அது மாதிரி எனக்கு உதவி செய்யாமல் இருந்தால் நடுக்கம் வந்திடும். நான் முப்பது வருசமா என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறேன். 

என்னால முடிஞ்சத செய்திட்டு வாறேன். ஆனால், சில விஷயத்தைப் பார்க்கும் போது பிச்சை எடுத்தாவது உதவி பண்ணலாம்னு தோணும். நாம செய்யுறத பார்த்து இன்னும் ஒரு நாலு பேர் உதவி செய்வாங்க..." என்று கூறியுள்ளார். 

திரை உலகில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் புகழ்பெற்றவராக இருந்தாலும், வாழ்க்கையில் மனிதநேயத்தின் முகமாக ஆனந்த் ராஜ் திகழ்கிறார் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. 

திரையுலகில் உள்ள பலர் தங்களது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஆனந்த் ராஜ் அதை ஒரு சமூகப் பொறுப்பாக மாற்றியிருப்பது பாராட்டத்தக்க விடயம் என சிலர் கூறிவருகின்றனர். 

Advertisement

Advertisement