• Feb 27 2026

பிரபாஸ், நானி முதல் சமந்தா வரை.. ராஷ்மிகாவின் திருமணத்திற்கு முன் லீக் ஆன வைரல் போட்டோஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவர்களின் திருமணம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கன்னடத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, தனது துள்ளலான நடிப்பும் அழகும் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். 

அதேபோல், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இயல்பான நடிப்பாலும் தனித்துவமான திரைப்பிரவேசத்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.


இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘டியர் காம்ரேட்’ படத்திலும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களில் இவர்களது சிறப்பான கெமிஸ்ட்ரி தான் காதல் வதந்திகளுக்குத் தொடக்கமாக அமைந்தது.

பின்பு, 2025 அக்டோபர் 3ஆம் தேதி விஜய் தேவரகொண்டா வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியான தகவல், திருமண செய்தியை உறுதி செய்தது.

பிப்ரவரி 24ஆம் தேதி உதய்பூரில் நடைபெற்ற ராஷ்மிகா மந்தனாவின் மெஹந்தி விழாவும்  மற்றும் சங்கீத் நிகழ்ச்சி தொடர்பான  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன. 


அதில் ராஜஸ்தானி அலங்காரங்கள், மணமகளின் நுணுக்கமான மெஹந்தி வடிவங்கள், மலர் அலங்காரங்கள் என அரச முறை திருமணத்திற்கு இணையான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்த நிலையில், இந்த விழாவில் ராம் சரண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நானி, சமந்தா, பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர், வெங்கடேஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள, AI மூலம் உருவாக்கப்பட்டு கொண்டாடிய புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

திருமணத்திற்கு இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், இந்த லீக் ஆன புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இந்த ஆண்டின் மிகப் பெரிய, நட்சத்திரங்கள் நிறைந்த முதலாவது திருமண விழா இதுதான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement