• May 08 2026

விஜயாவின் அடிவயிற்றை கலங்க வைத்த சிந்தாமணி.! பயத்தின் உச்சத்தில் மீனா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  சிந்தாமணி விஜயாவை கோவிலுக்கு வரவழைத்து அங்கு  சாமியார் சொன்னதெல்லாம் உண்மை,  அவரிடம் பலர் வாக்கு கேட்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றார். 

மேலும் விஜயாவும் அவரிடம் குறி கேட்க,  நீ உன்னுடைய மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்ற வில்லை என்றால் உன்னுடைய தாலி பாக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டே செல்லும் என மேலும் பயமுறுத்துகின்றார். 

விஜயா அங்கிருந்து போன பின்பு, அந்த சாமியாருக்கு பணத்தை கொடுத்து அவருடன் நடித்தவர்களுக்கும் பணத்தை கொடுத்து  கொஞ்ச நாளைக்கு இந்த ஊரிலேயே இருக்க வேண்டாம் என  சிந்தாமணி அனுப்பி வைக்கின்றார். 


அதற்கு பிறகு மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வர அவரும் ஒரு ஜோசியரை வரவழைத்து பார்க்கின்றார். அதில் அவரும் இப்போது உங்களுடைய மாமியாருக்கு  நேரம் சரியில்லை. ஆனால் அவருடைய கணவருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை .

அவர்களுடைய ஜாதக புத்தகம் இருந்தால் தான் ஜோசியத்தை  சரியாக கனித்து கூற முடியும்.  அதை எடுத்து வருமாறும், அது வரையில் தினமும் தாலிக்கு பூஜை பண்ணுமாறு மீனாவுக்கு சொல்லுகின்றார். மீனாவும் கலங்கி நிற்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement