இந்தியாவில் நடைபெறும் திருமண சடங்குகளில் அதிகப்படியான செலவில் நடைபெறும் திருமணங்களாக பிரபலங்கள், அரசியல்வாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பணக்காரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திருமணங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் நடிகர் ராஷ்மிகா மந்தானா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணத்திற்கு மட்டும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது வரை தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பொதுவாகவே திருமணம் என்றாலே அதிகமாக செலவிடப்படுவது நகைகளுக்கு தான். அதற்கு பின்பு உணவு மற்றும் மண்டபம், ஹோட்டல் செலவு, மற்றும் பல செலவுகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், நடிகர் ராஷ்மிகா மந்தானா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணத்தில் உணவு மற்றும் ஹோட்டல் செலவுகள் இரண்டையும் சேர்த்தும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி, உதய்பூரில் அவர்களுடைய திருமணம் அரண்மனையில் நடைபெற்றாலும், அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் திருமணத்துக்கு முந்திய சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எல்லாம் அங்கு நடைபெற்றன. தங்களுடைய திருமணத்திற்காக ITC Mementos என்ற ஹோட்டலை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவருடைய சார்பிலும் விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் குளத்தில் வாலிபால் கிரிக்கெட் போன்றவையும் நடத்தப்பட்டது.
குறித்த ஹோட்டலில் மொத்தமாக 117 அறைகள் உள்ளன. அவற்றுக்கு 20,000 முதல் 70,000 வரை ஒரு இரவு கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, விரோஷ் திருமணத்திற்காக மொத்தமாக ஒரு நாளைக்கு சுமார் ஒரு கோடி முதல் 2.5 கோடிகள் வரை கட்டணமாக அவர்கள் செலுத்தி இருக்கக்கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!