• Feb 27 2026

18 வயசு பையனுக்கு யாரும் அப்பாவா நடிக்க மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய சசிகுமார்

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  சிறந்த இயக்குநராகவும்  சிறந்த  நடிகராகவும் தனக்கென தனி சாம்ராஜத்தை அமைத்து தக்க வைத்தவர் சசிகுமார் . இவருடைய நடிப்பில் வெளியாக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திலேயே  பல பெருமைகளை சேர்த்தவர் சசிகுமார்.  அந்தப் படம்  பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக காணப்பட்டது.  

பொதுவாக இவருடைய படங்கள் நண்பர்கள், துரோகங்கள், சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை பிரதிபலிப்பவையாகவே காணப்படுகின்றன. 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இப்படத்தையும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார்.

இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து  விருது வழங்கும் விழாவில்  பல விஷயங்களை சசிகுமார் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் கூறுகையில்,  இந்த படத்தின் இயக்குநர் என்னிடம் ஆரம்பத்தில் 18 வயசு பையனுக்கும் அப்பாவாக நடிக்க வேண்டும் என கூறினார். 


அதற்காக  பலரிடம் விசாரித்து பார்த்துள்ளார். ஆனால் இறுதியில் அந்த கதை சுற்றி என்னிடமே வந்தது.  இதனை யாருமே பண்ணி இருக்க மாட்டார்கள்.  18 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க எந்த ஹீரோவும்  ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 

ஆனால் நான் செய்வேன்.  நானும் யோசிச்சு இருந்தேன் என்றால் இந்த படத்தை பண்ணி இருக்க மாட்டேன். இது ஒரு ஹிமாலிட்டிய  சொல்லுற படம், மனுஷனை மனுஷனா பார்க்க சொல்லுற படம். 

நானும் அதுக்குள்ள  இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.  அதனால என்னுடைய இயக்குனருக்கு நன்றி சொல்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement