• Dec 29 2025

இவங்க என்ன இப்புடி சொல்லிட்டாங்களே..! நடிகர் விஜய் எனக்கு Crush இல்ல... ராஷ்மிகா பகீர்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் இளம் மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடந்த ஒரு ரசிகர் சந்திப்பில், ராஷ்மிகாவிடம் அவரது சிறு வயது “crush” யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது. இதற்கு அவர் சிரிப்புடன், திறந்த மனதுடன் தனது உண்மையான கருத்தை பகிர்ந்துள்ளார்.


நடிகை ராஷ்மிகா, தனது பதிலில், “எங்க அப்பா நிறைய தமிழ் படங்கள் பாப்பாரு. அவருக்கு ரஜினி சாரைப் பிடிக்கும். எனக்கும் கூட பிடிக்கும். ஆனால் என்னுடைய பருவ காலங்களில் விஜய் சார் படங்கள் அதிகம் பார்ப்பேன். அவரை, "Oh My God" அப்படித் தான் பார்ப்பேன்... விஜய் சார் மேல crush இல்லை. அவர் மேல மரியாதை இருக்கு.” எனக் கூறியுள்ளார். 


ராஷ்மிகாவின் இந்த பதில், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்கள் இதை பகிர்ந்துள்ளனர், மற்றவர்கள் நடிகை தனது உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டியுள்ளனர்.


Advertisement

Advertisement