வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் சூழல் அதிகரித்து வரும் நிலையில், இளம் தலைமுறையினரான Gen Z வாக்காளர்கள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய், இளம் வாக்காளர்களை நோக்கி முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களிலும் பொது மேடைகளிலும் அரசியல் விவாதங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இவர்களை நேரடியாக அணுகிக்கொண்டு விஜய் கூறிய செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
த.வெ.க. தலைவர் விஜய், இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக, “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் Gen Z வாக்காளர்கள் தான் முக்கியமானவர்கள். வாக்கு என்ற ஒன்று இருந்தால் தான் நாட்டை நாம் காப்பாற்ற முடியும்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஒரு கருத்தே இளைஞர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது வாக்குரிமை குறித்த இந்த அறிவுறுத்தல், அரசியல் விழிப்புணர்வை உயர்த்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
Listen News!