காந்தா படத்தில் தனது திறமையான நடிப்பிற்காக ரசிகர்களிடையிலும் விமர்சகர்களிடையிலும் பாராட்டுகளை பெற்ற நடிகர் சமுத்திரக்கனி, தற்போது தனது புதிய கருத்துகளால் திரையுலகின் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்திய நேர்காணல்களில், பிரபாஸின் புதிய படம் "தி ராஜா சாப்" குறித்து அவர் பேசியது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

காந்தா படத்தின் புரமோஷனின் போது சமுத்திரக்கனி, “தி ராஜா சாப் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இயக்குநர் மாருதி முற்றிலும் மாயாஜாலமான உலகத்தை உருவாக்கி உள்ளார். இந்தப் படம் பிரபாஸை புதுவிதமான அவதாரத்தில் காண்பிக்கின்றது.” எனக் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. பிரபாஸின் ரசிகர்கள் மற்றும் படத்தின் எதிர்பார்ப்பில் உள்ளோர், சமுத்திரக்கனியின் விமர்சனத்தால் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

சமுத்திரக்கனியின் பாராட்டான கருத்து, தி ராஜா சாப் படத்தின் தரம் மற்றும் வெற்றி குறித்து முன்னதாகவே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இவர் கூறியது போல, இயக்குநர் மாருதி ஒரு மாயாஜாலமான உலகத்தை படத்தில் உருவாக்கியுள்ளார் என்பதால், இந்தப் படம் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!