• Oct 09 2024

லவ்வர் படத்தில் எக்கச்சக்கமான கெட்ட வார்த்தைகள்? படக் குழுவினருக்கு விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன். இவருடைய கெரியரில் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான்  ஜெய் பீம். 

கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படத்தினை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் இந்த படத்திற்குப் பிறகு பெரும் வரவேற்பு பெற்றார். அதன்பின் அவரை ஜெய் பீம் மணிகண்டன் என அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர்.


இதை தொடர்ந்து, இவர் கதாநாயகனாக நடித்த குட் நைட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல  வரவேற்பை பெற்றது.

முதன்முதலாக மணிகண்டன் சினிமாவிற்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவே அறிமுகமானார். அதற்கு பிறகே நடிப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார்.


தற்போது, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் லவ்வர் திரைப்படத்திற்கு கதாநாயனாக நடிக்கிறார்.

இந்த நிலையில், லவ்வர் படத்தில் இடம்பெற்றுள்ள 18 கெட்ட வார்த்தைகளை நீக்க தணிக்கை குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சில இடத்தில் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு மியூட் போட்டுக்கொள்ளுமாறு தணிக்கை உத்தரவிட்டு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement