• May 07 2024

அடுத்த பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ள ரஜினி-கமல்! வெல்லப் போவது யார்? கோலிவுட் நிலவரம் இது தான்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'தக் லைஃப்'. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன.

அதுபோல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில், அதனை  முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171, கமல்ஹாசனின் தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தலைவர் 171, கமலின் தக் லைஃப் இரண்டுமே அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ரஜினி - கமலின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிர்க்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement