• Dec 03 2024

அரசியலுக்கு வர முன் விஜயகாந்த் கெட்டவரா? இன்னும் பல விஜய் வேண்டும் எனக்கு... பிரபல நடிகர் பகிர் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய். அவரது படங்கள் அனைத்துமே அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக்கூடியவை. 

இதன் காரணமாக அவரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கும் தயாரிப்பாளர்கள் அனைவருமே தயாராக இருக்கிறார்கள்.

தற்போது விஜய் மக்கள் இயக்க கட்சியின் தலைவராக பொறுப்பை ஏற்று கொண்ட விஜய், ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாகவே அரசியலில் கால் பதித்தார். தளபதி அரசியலில் கால் பதித்ததை பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர் . 


அந்த வகையில் நடிகர் ரஞ்சித், விஜய் பற்றி மீடியா முன்பதாக பேசியதை பார்க்கலாம் வாங்க , 

விஜயகாந்த் சார் கூட அரசியலுக்கு வருவதற்கு முன்பதாக வேற மாதிரி இருந்தார் . ஆனால் அரசியலுக்கு வந்ததன் பின்பு உங்கள் எல்லோருக்குமே தெரியும் இன்னும் அவரை நினைத்து கண்ணீர் விடாத மக்களே  இல்லை . அவரை போற்றி பேசுகிறார்கள் , நல்ல மனிதன் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . 

இது தான் அரசியலில் அவர் பிடித்த இடம் அது போல தான் விஜய் ஒரு மனிதன் ஒரு மக்களுக்காக நல்லது செய்து வருகிறார் என்றால் ஒரு விஜய் இல்லை இன்னும் பல விஜய் வர வேண்டும் . தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல முடிவு வரும்..  என்று மிகவும் சிறப்பாக மீடியா முன்பதாக கூறியிருந்தார் .

Advertisement

Advertisement